/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனவிலங்குகள் நடமாட்டம் கட்டுப்படுத்தக்கோரி ஆர்பாட்டம்
/
வனவிலங்குகள் நடமாட்டம் கட்டுப்படுத்தக்கோரி ஆர்பாட்டம்
வனவிலங்குகள் நடமாட்டம் கட்டுப்படுத்தக்கோரி ஆர்பாட்டம்
வனவிலங்குகள் நடமாட்டம் கட்டுப்படுத்தக்கோரி ஆர்பாட்டம்
ADDED : பிப் 23, 2025 05:22 AM
மூணாறு : வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறினால் ஏப். ஒன்றில் இரவிகுளம் தேசிய பூங்காவை திறக்க அனுமதிக்க மாட்டோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்தனர்.
மூணாறு பகுதியில் அதிகரித்து வரும் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த இந்திய இளைஞர் பெருமன்றம்,மகளிர் அணி சார்பில் மூணாறு வன உயிரின பாதுகாவலர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது.
இளைஞர் பெருமன்றம் மண்டல தலைவர் ராஜா தலைமை வகித்தார். இந்திய கம்யூ., இடுக்கி மாவட்ட துணைத் தலைவர் பழனிவேல் துவக்கி வைத்தார்.
மாவட்ட குழு உறுப்பினர்கள் காமராஜ், முருகன், மண்டல தலைவர் சந்திரபால் மற்றும் மூணாறு, தேவிகுளம் ஆகிய ஊராட்சிகளின் உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது பேசிய கட்சியினர் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மார்ச் 31க்குள் எடுக்கவில்லை என்றால் வரையாடுகளின் பிரசவம் முடிந்து ஏப். ஒன்றில் திறக்கப்படும் இரவிகுளம் தேசிய பூங்காவை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்தனர்.

