/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூன்றாம் கட்ட பயிற்சியில் தபால் ஓட்டுக்கள் பெற ஏற்பாடு
/
மூன்றாம் கட்ட பயிற்சியில் தபால் ஓட்டுக்கள் பெற ஏற்பாடு
மூன்றாம் கட்ட பயிற்சியில் தபால் ஓட்டுக்கள் பெற ஏற்பாடு
மூன்றாம் கட்ட பயிற்சியில் தபால் ஓட்டுக்கள் பெற ஏற்பாடு
ADDED : ஏப் 09, 2024 12:22 AM
தேனி: அரசு அலுவலர்கள், ஆசிரியர்களிடம் ஏப்.,13ல் தபால் ஓட்டுகளை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேனி லோக்சபா தொகுதியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களாக 6079 பேர் பணிபுரிய உள்ளனர். இவர்களில் 4858 பேருக்கு பணிபுரியும் இடங்களில் ஓட்டினை பதிவு செய்வதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சில ஆசிரியர்கள் பிற மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்தில் பணி புரிகின்றனர். அவர்களுக்கு தேனி தொகுதியில் தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் தங்கள் மாவட்டங்களில் தபால் ஓட்டளிக்க விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான தபால் ஓட்டு சீட்டுகள், அதற்கான கவர்கள் கலெக்டர் அலுவலகம் வந்துள்ளன. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு 3ம் கட்ட பயிற்சி தொகுதி வாரியாக ஏப்.,13ல் நடக்க உள்ளது. பயிற்சி நடைபெறும் இடங்களிலேயே தபால் ஓட்டுகளை பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
போலீசார் ஏப்.,10 முதல் ஏப்.,15க்குள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்படும் சிறப்பு முகாமில் தபால் ஓட்டளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

