ADDED : செப் 15, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம் : கம்பம் சி.பி.யூ. மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் திருமலை சுதாகரன் தலைமை வகித்தார். பொருளாளர் ராமசாமி முன்னிலை வகித்தார்.நிர்வாக குழு உறுப்பினர் பிருதிவிராஜன் வரவேற்றார். எம்.பி. தங்க தமிழ் செல்வன் சைக்கிள்களை வழங்கினார்.
உடற்கல்வி ஆய்வாளர் குபேந்திரன் , பள்ளி தலைமையாசிரியை சையது நஸீமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.