/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
13 சிறப்பு பள்ளிகளில் மதிய உணவு வழங்க ஏற்பாடு
/
13 சிறப்பு பள்ளிகளில் மதிய உணவு வழங்க ஏற்பாடு
ADDED : மே 28, 2024 03:32 AM
தேனி, : மாவட்டத்தில் உள்ள 13 சிறப்பு பள்ளிகளில் ஜூன் முதல் மதிய உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் சிறப்பு பள்ளிகளில் கல்வி பயில்கின்றனர். இந்த சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்க அரசு மானியம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மாநில அரசு தமிழகத்தில் உள்ள 175 சிறப்பு பள்ளிகளுக்கும் அருகில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு தயார் செய்து சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூன் முதல் அமலுக்கு வருகிறது.
அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள 13 சிறப்பு பள்ளிகளுக்கு அரசுப்பள்ளிகளில் மதியம் சத்துணவு தயாரித்து வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் 20 வயதிற்குட்பட்ட 339 மாணவர்கள் பயனடைவர். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தில் என்ன வகையான உணவுகள் வழங்கப்படுகிறதோ அதே உணவுகள் சிறப்பு பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்படும். பள்ளிகளுக்கு தேவையான தட்டு, டம்ளர் உள்ளிட்ட பாத்திரங்கள், உணவு எடுத்து செல்ல ஆகும் செலவுகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றனர்.