/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆண்டுக்கு மூன்று முறை ஊராட்சிகளில் குடிநீர் தரப்பரிசோதனை அவசியம்
/
ஆண்டுக்கு மூன்று முறை ஊராட்சிகளில் குடிநீர் தரப்பரிசோதனை அவசியம்
ஆண்டுக்கு மூன்று முறை ஊராட்சிகளில் குடிநீர் தரப்பரிசோதனை அவசியம்
ஆண்டுக்கு மூன்று முறை ஊராட்சிகளில் குடிநீர் தரப்பரிசோதனை அவசியம்
ADDED : மே 27, 2024 12:40 AM
கம்பம்: 'தமிழகத்திலுள்ள 12 ஆயிரத்து 545 ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 3 முறை குடிநீர் தரப்பரிசோதனை நடத்த பொது சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, பொது மக்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் விநியோகிக்கப்படும் குடிநீர் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும். நகராட்சிகள், மாநகராட்சிகளில் மட்டும்ஆண்டுக்கு 3 முறை குடிநீர் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆனால் 12 ஆயிரத்து 545 கிராம ஊராட்சிகள், 159 பேரூராட்சிகளில் குடிநீர் பரிசோதனை சம்பந்தப்பட்ட குடிநீர் வாரிய ஆய்வகங்களில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும்மேலோட்டமாக பரிசோதனை செய்யப்படுகிறது. இதுதொடர்பாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.
குறிப்பாக ஊராட்சிகளில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஊராட்சிகளிலும், பேரூராட்சிகளிலும் ஆண்டுக்கு 3 முறை குடிநீர் தரப்பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆய்வக வசதி இல்லை: தமிழகத்தில் குடிநீர் பகுப்பாய்வு மையங்கள் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலியில் மட்டுமே உள்ளன. 12,545 ஊராட்சிகள், 159 பேரூராட்சிகளின் குடிநீர் தரப்பரிசோதனையை ஆண்டுக்கு 3 முறை செய்வது சவாலானதாக இருக்கும்.
எனவே குடிநீர் பகுப்பாய்வு மையங்களை அதிக எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 2 மாவட்டங்களுக்கு ஒன்று வீதம் அமைக்கவேண்டும்.அதற்கான உத்தரவை தமிழக அரசு தாமதமின்றி பிறப்பிக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தினர்.

