/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நாளை பொது வினியோக குறை கேட்பு முகாம்
/
நாளை பொது வினியோக குறை கேட்பு முகாம்
ADDED : ஜூன் 14, 2024 05:35 AM
தேனி: மாவட்டத்தில் பொது வினியோகத்திட்ட குறைகள் கேட்பு முகாம் 5 தாலுகாக்களில் நாளை (ஜூன் 15ல்) நடக்கிறது.
பெரியகுளம் தாலுகா சில்வார்பட்டி அருகே நல்லகருப்பன்பட்டியில் வாரியாக ஆர்.டி.ஓ., முத்துமாதவன். தேனி தாலுகா கொடுவிலார்பட்டியில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சசிகலா, ஆண்டிப்பட்டி தாலுகா ஜம்புலிபுத்துார் அருகே ஸ்ரீரங்காபுரத்தில் சமூக பாதுகாப்பு திட்ட சப்கலெக்டர் முரளி, உத்தமபாளையம் தாலுகா லோயர்கேம்ப் அருகே பளியன்குடியில் ஆர்.டி.ஓ., தாட்சாயிணி, போடி தாலுகா அம்மாபட்டி, சுந்தர்ராஜபுரத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி தலைமையில் ரேஷன் கடைகள் முன் முகாம் நடக்கிறது.
இம் முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி, கடை மாற்றம் தொடர்பாக மனுக்கள் வழங்கலாம்.
பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நுகர்வோர் நடவடிக்கை குழுக்களின் பிரநிதிகள் கூட்டத்தில் பங்கேற்கலாம்.
முகாமில் பெறப்படும் புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு பதில் தரப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.