/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
உயரழுத்த மின்கம்பம் மாற்றி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
/
உயரழுத்த மின்கம்பம் மாற்றி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
உயரழுத்த மின்கம்பம் மாற்றி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
உயரழுத்த மின்கம்பம் மாற்றி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 09, 2024 12:37 AM

தேனி : தேனி ஒன்றியம் வீரபாண்டி பேரூராட்சி 3வது வார்டு கணேஷ்நகரில் குடியிருப்புப் பகுதியில் உயரழுத்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். குடியிருப்புப் பகுதிகளில் உயரழுத்த மின்பாதை வழித்தடம் தப்புக்குண்டு சப்- -ஸ்டேஷனுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதியில் வசிக்கும் மக்கள் மாடிப்பகுதியில் பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இந் நிலையில், கணேஷ் நகரில் ஒரு பட்டா நிலத்தில் அமைந்துள்ள உயரழுத்த மின்கம்பத்தை மாற்றி, குடியிருப்புப் பகுதி வழியாக தப்புக்குண்டு வழித்தடத்தில் உயரழுத்த மின் கம்பியை இணைக்கும் பணி துவங்கியது. இதற்காக மின்வாரிய அலுவலர்கள் மண் அள்ளும் இயந்திரத்தை அங்கு கொண்டு சென்றனர்.
மின் லைன் மாற்றுவதால் குடியிருப்புகளில் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து, மண் அள்ளும் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். மின்வாரிய உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை தீரவில்லை. இதனால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.