/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பொதுமக்கள் மதியம் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்: கலெக்டர் அறிவுரை

ADDED : ஏப் 01, 2024 11:59 PM
தேனி : கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மதியத்தில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் ஷஜீவனா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடலில் நீர்சத்து குறையாமல் இருக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீர் எடுத்து செல்ல வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுங்கள். மெல்லிய தளர்வான பருத்தி ஆடை அணிய வேண்டும். மதியம் 12:00 மணி முதல் 3:00 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
கோடை காலம் முடியும் வரை மழலையர் பள்ளிகள் செயல்படுத்த வேண்டாம். டீ, காபி, கார்பனேட் குளிர்பானங்கள், காரவகை உணவுகளை தவிர்க்கவும். தனியே வசிக்கும் முதியவர்களின் உடல்நிலையை தினமும் இருமுறை கவனித்துக்கொள்ள வேண்டும். கால்நடைகள், வளர்ப்பு பிராணிகளை நிழல் பகுதியில் கட்டி வைக்க வேண்டும். அவைகளுக்கு போதிய அளவு குடிநீர், உணவு வழங்க வேண்டும்.வெப்பம் அதிகம் உள்ளதால் மின் ஒயர்கள் மூலம் 'சார்ட்சர்க்யூட்' ஏற்பட்டு தீ பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே கூரை வீடுகளில் வசிப்பவர்கள் விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள், சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.