/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சிவன், பெருமாள் கோயில்களில் புரட்டாசி, பவுர்ணமி பூஜை
/
சிவன், பெருமாள் கோயில்களில் புரட்டாசி, பவுர்ணமி பூஜை
சிவன், பெருமாள் கோயில்களில் புரட்டாசி, பவுர்ணமி பூஜை
சிவன், பெருமாள் கோயில்களில் புரட்டாசி, பவுர்ணமி பூஜை
ADDED : செப் 18, 2024 04:21 AM

தேனி,: மாவட்டத்தில் புரட்டாசி மாத பிறப்பு, பவுர்ணமியை முன்னிட்டு சிவன், பெருமாள் கோயில்களில் நடந்த சிறப்பு பூஜைகள், தீபாராதனையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர்.
தேனி
தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர், அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தேனி நகர் பகுதி, சிவராம் நகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அதே போல் என்.ஆர்.டி., நகர் சிவகணேச கந்த பெருமாள் கோயில், மதுரை ரோடு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் பெற்றனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
பெரியகுளம்
கைலாசபட்டி கைலாசநாதர் கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர், பெரியநாயகி அம்மன், நந்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. வர்த்தக பிரமுகர் பாண்டியராஜன் அன்னதானம் வழங்கினார்.
ஏற்பாடுகளை அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு கவுரவ ஆலோசகர் ஜெயபிரதீப், தலைவர் நாராயணன், செயலாளர் சிவக்குமார், பொருளாளர் விஜயராணி செய்திருந்தனர். பெரியகுளம் அருகே ஈச்சமலை மகாலட்சுமி கோயிலில் புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. மகாலட்சுமிக்கு சந்தனம், பால், தயிர், தேன் உட்பட 11 வகை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மகாலட்சுமி அம்மனுக்கு லட்ச தீபம் காண்பிக்கபட்டது. ஏற்பாடுகளை டாக்டர் மகா ஸ்ரீ ராஜன் செய்திருந்தார்.
கூட்டு பிரார்த்தனை
பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. 12 மணி நேரம் ஹரேராம நாம கீர்த்தனம், கூட்டு பிரார்த்தனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரசாதம் வழங்கப்பட்டது. நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ் கூறுகையில்: புரட்டாசி 1லும், செப்.17 முதல் அக்.17 வரை, 'துயர் துடைக்க வருகிறார் கண்ணன்' என்ற தலைப்பில் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் இருந்து ஸ்ரீ கிருஷ்ணனுடன் உங்கள் இல்லத்தில் நாம கீர்த்தனா கூட்டு பிரார்த்தனை செய்யப்படும். இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. தொடர்புக்கு: 9600536261.
போடி: போடி சீனிவாசப் பெருமாள் கோயிலில் தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளின் தரிசனம் பெற்றனர். சிறப்பு பூஜைகள், சுவாமி அலங்காரத்தினை கார்த்திக் பட்டாச்சாரியார் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டன. போடி மேலச்சொக்கநாதபுரத்தில் தொட்டராயர் ஒன்னம்மாள் கோயில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.--