/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நடைசீட்டு வழங்குவதில் தாமதத்தை கண்டித்து குவாரிகள் வேலை நிறுத்தம்
/
நடைசீட்டு வழங்குவதில் தாமதத்தை கண்டித்து குவாரிகள் வேலை நிறுத்தம்
நடைசீட்டு வழங்குவதில் தாமதத்தை கண்டித்து குவாரிகள் வேலை நிறுத்தம்
நடைசீட்டு வழங்குவதில் தாமதத்தை கண்டித்து குவாரிகள் வேலை நிறுத்தம்
ADDED : மார் 05, 2025 06:42 AM
தேனி: கல், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்டவைகளை கட்டுமான பணி நடைபெறும் இடத்திற்கு வாகனங்களில் கொண்டு செல்ல டிரான்சிட் நடைச்சீட்டு கனிமவளத்துறை வழங்குவதில் ஏற்படும் தாமதம், வழக்குகள் பதிவு செய்வதை கண்டித்து தேனி மாவட்ட வைகை கல்குவாரி, ஜல்லி கிரஷர் உரிமையாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சங்கத்தினர் கூறுகையில், 'கல் குவாரிகளில் இருந்து கிரஷர் எடுத்து செல்ல நடைசீட்டு பெறுகிறோம். அங்கிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு செல்லப்படுகிறது. கிரஷரில் இருந்து ஜல்லி உள்ளிட்டவை கட்டுமான பயன்பாட்டிற்கு கொண்டு செல்ல மீண்டும் 'டிரான்ஸ்சிட்' எனப்படும் நடைசீட்டு வாங்க அறிவுறுத்துகின்றனர். அதற்கு விண்ணப்பித்து, இது வரை பலருக்கு 'டிரான்ஸ்சிட்' நடைசீட்டு வழங்கவில்லை.
இது தொடர்பாக டிச.,16ல் அப்போதைய கலெக்டரிடம் மனு அளித்தோம். தற்போதைய கலெக்டரிடமும் மனு அளித்துள்ளோம். ஆனால், பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத் பீடன் தலைமையிலான அதிகாரிகள் கடந்த சில வாரங்களாக கட்டுமான பணிக்கு பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை பிடித்து உரிமையாளர், டிரைவர் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்கிறது. இதனால் தொழில் பாதிக்கிறது. முழுமையாக விசாரிக்காமல் பணிகளை நிறுத்துகின்றனர். டிரான்சிட் நடைசீட்டு முறை தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை துவங்கி உள்ளோம் என்றனர்.