/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை
/
முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் மழை
ADDED : மே 02, 2024 02:29 AM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் 4 மாதங்களுக்கு பின் மழை பெய்தது.
2023 டிசம்பரில் முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் மழை பெய்தது. அதன் பின் கடந்த நான்கு மாதங்களாக மழையின்றி வெப்பம் நிலவியது. நீர் மட்டம் வெகுவாக குறைந்தது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருந்தது.
இந்நிலையில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 5.4 மி.மீ., பெரியாறில் 16 மி.மீ., மழை பதிவானது. நான்கு மாதங்களுக்கு பின் மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழை தொடருமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் 115.15 அடியாக உள்ளது (மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 105 கன அடியாகவும், அதே அளவு தமிழக பகுதிக்கு நீர் திறப்பும் உள்ளது. நீர் இருப்பு 1754 மில்லியன் கன அடியாகும்.

