/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவர் போக்சோவில் கைது
/
பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தவர் போக்சோவில் கைது
ADDED : செப் 13, 2024 06:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்குச் சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட் குட்டியாறு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் 24.
இவர், பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
கர்ப்பம் அடைந்த மாணவி வீட்டில் மயங்கி விழுந்தார். பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது மாணவி கர்ப்பம் என தெரியவந்தது.
மருத்துவமனை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் மாணவியிடம் நடத்திய விசாரணையில் கர்ப்பத்திற்கு காரணம் அஜித்குமார் என தெரியவந்தது. அவரை, மூணாறு போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.