/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெண் பலாத்காரம்: 5 பேர் மீது வழக்கு
/
பெண் பலாத்காரம்: 5 பேர் மீது வழக்கு
ADDED : மே 30, 2024 03:58 AM
பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் பெண் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த புகாரில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் 5 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் மதுரையில் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது குடும்பத்திற்கும் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மணி 40. குடும்பத்தினருக்கும் கொடுக்கல், வாங்கல் பிரச்னை உள்ளது. இந்நிலையில் பெரியகுளம் வடகரை பகுதியில் செவிலியர் நடந்து செல்லும் போது, மணி தூண்டுதலில் அவரது நண்பர்கள் பழனி 28. நவநீத் 28. சுரேந்தர் 35. ஹரி 20 ஆகியோர் காரில் கடத்தினர். அந்தப் பெண்ணை பழனி, நவநீத் ஆகியோர் காரில் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனை மணி தனது அலைபேசியில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவேன் என மிரட்டியுள்ளார். பெரியகுளம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ஜெயராணி விசாரணை செய்து வருகிறார். -