/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூல வைகை ஆற்று நீர் வைகை அணைக்கு வந்து சேரவில்லை; தொடர் நீர் வெளியேற்றத்தால் 9 அடி குறைந்தது

ADDED : மே 19, 2024 05:35 AM
வருஷநாடு மலைப்பகுதியில் இருந்து வரும் மூல வைகை ஆற்று நீர் வைகை அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. வருஷநாடு மலைப்பகுதியில் பல்வேறு சிற்றாறுகள் ஒன்று சேர்ந்து மூல வைகை ஆறாக வாலிப்பாறை, தும்மக்குண்டு, முறுக்கோடை, வருஷநாடு, மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு, கண்டமனூர், அம்மச்சியாபுரம், குன்னூர் வழியாக வைகை அணை சென்று சேரும். கடந்த சில நாட்களாக வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியான வருஷநாடு மலைப் பகுதியில் அடுத்தடுத்து மழை பெய்கிறது. மூல வைகை ஆற்றில் வரும் நீர் மணற்பாங்கான பகுதிகளை கடந்து செல்வதால் வைகை அணை சென்று சேர தாமதமாகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன் மூல வைகை ஆற்று நீர் கடமலைக்குண்டு கிராமத்தை கடந்தது.
ஆற்றில் நீர் வரத்து படிப்படியாக குறைந்ததால் மூல வைகை ஆற்று நீர் வைகை அணைக்கு இன்னும் சென்று சேரவில்லை.
தற்போது பெரியாறு, தேனி முல்லை, ஆறு போடி கொட்டக்குடி ஆறுகள் மூலம் வைகை அணைக்கு வினாடிக்கு 263 கனஅடி நீர்வரத்து உள்ளது. நேற்று வைகை அணை நீர்மட்டம் 49.64 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக வினாடிக்கு 1500 கன அடியாக வெளியேறிய நீர் நேற்று மதியம் 2:25 மணிக்கு வினாடிக்கு 1200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 72 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் தொடர்ந்து வெளியேறுவதால் கடந்த 9 நாட்களில் அணை நீர்மட்டம் 9 அடி குறைந்துள்ளது.