/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரியல் எஸ்டேட் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
/
ரியல் எஸ்டேட் நலச்சங்க ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 08, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வட்டார ரியல் எஸ்டேட் நலச்சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சக்கம்பட்டியில் நடந்தது.
சங்க தலைவர் சேட்டுபரமேஸ்வரன் தலைமை வகித்தார். கவுரவ தலைவர் முத்து வெங்கட்ராமன், துணைத் தலைவர் தர்மர், பொருளாளர் குருசாமி, சட்ட ஆலோசகர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தை பதிவு செய்யவும், 19 பேர் கொண்ட நிர்வாக குழு சங்கத்தின் செயல்பாடுகளை கண்காணிக்கவும் அங்கீகரித்து தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.