/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கும்பக்கரை அருவியில் தொலைந்த 4 பவுன் தங்க செயின் மீட்பு
/
கும்பக்கரை அருவியில் தொலைந்த 4 பவுன் தங்க செயின் மீட்பு
கும்பக்கரை அருவியில் தொலைந்த 4 பவுன் தங்க செயின் மீட்பு
கும்பக்கரை அருவியில் தொலைந்த 4 பவுன் தங்க செயின் மீட்பு
ADDED : மே 28, 2024 04:08 AM
பெரியகுளம், : கும்பக்கரை அருவியில் குளிக்கும்போது காணாமல் போன ரூ.2 லட்சம் மதிப்பிலான 4பவுன் தங்கச்செயின் மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் 8 நாட்களுக்கு பிறகு நேற்று(மே 27) முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வந்திருந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரைச் சேர்ந்த கோபிநாத் குடும்பத்துடன் அருவியில் குளித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரத்தில் அவரது கழுத்தில் அணிந்து இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நான்கு பவுன் தங்கச் செயின் தண்ணீரில் தொலைந்தது. ரேஞ்சர் டேவிட் ராஜாவிடம் கோபிநாத் தகவல் தெரிவித்தார். வனத்துறை பணியாளர்கள் தண்ணீரில் மூழ்கி தேடினர். பாறையின் இடுக்கில் சிக்கியிருந்த தங்க செயின் மீட்கப்பட்டது. அந்தச் செயினை டேவிட்ராஜா, கோபிநாத்திடம் வழங்கினார்.
வேண்டுகோள்: சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கும்போது முடிந்தவரை கழுத்தில் தங்க செயின்களை உறவினர்களிடம் ஒப்படைத்து விட்டு குளிக்க வேண்டும்.
தாலி சங்கிலியை கையில் பிடித்து கொண்டு குளிக்கலாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.-