ADDED : ஜூன் 02, 2024 04:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: கம்பம் சங்கரலிங்கம் பிள்ளை தெருவில் வசிப்பவர் முத்துராஜ் 64, இவரது மனைவி சமீபத்தில் இறந்து விட்டார்.
இவரது மகன், மகள் வெளியூரில் வேலை பார்க்கின்றனர். கடந்த வாரம் இவர் கடைக்கு போய் விட்டு திரும்புவதற்குள் வீட்டில் பீரோவில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடு போனது. கம்பம் வடக்கு எஸ்.ஐ - இளையராஜா விசாரணை செய்து கம்பமெட்டு காலனியை சேர்ந்த நிசார் அகமது 30, என்பவரை கைது செய்து திருடு போன நகைகளை மீட்டனர்