/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் 'ரெட் அலர்ட்' கட்டுப்பாடுகள் தீவிரம்
/
இடுக்கியில் 'ரெட் அலர்ட்' கட்டுப்பாடுகள் தீவிரம்
ADDED : மே 19, 2024 05:29 AM

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் அதிதீவிர மழைக்கான ' ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டதால், மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
இடுக்கி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்த நிலையில் இன்றும் (மே 19) நாளையும் அதி தீவிரமான மழைக்கு வாய்ப்புள்ளதால் வானிலை ஆய்வு மையம் நேற்று ' ரெட் அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது.
மூணாறு அருகே சின்னக்கானல் ஊராட்சியில் சூரியநல்லியில் இருந்து கொழுக்குமலைக்கு சாகச பயணமாக ஜீப் சவாரி இயக்கப்படுகிறது. அதனை இரண்டு நாட்கள் தடை செய்து உத்தரவிடப்பட்டது. மாவட்டத்தில் மண், நிலச்சரிவுக்கு வாய்ப்புள்ளதால் கல்குவாரி, சுரங்கம் ஆகிய பணிகள் தடை செய்யப்பட்டன.
தொடுபுழா அருகே உள்ள மலங்கரை அணையில் நீர் மட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு ஷட்டர்கள் பத்து செ.மீ., வீதம் உயர்த்தப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் ஆறு ஷட்டர்கள் வழியாக 265. 182 கன அடி தண்ணீர் திறந்து விடப்படும் என முன்னெச்சரிக்கை விடப்பட்டது
கட்டுப்பாட்டு அறை: கலெக்டர் அலுவலகம் மற்றும் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு, இடுக்கி, தொடுபுழா ஆகிய தாலுகா அலுவலகங்கள் ஆகியவற்றில் 24 மணி நேரம் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன.

