ADDED : ஆக 26, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மாவட்ட ரெட்கிராஸ் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
துணைத் தலைவராக கலெக்டர் நேர்முக உதவியாளர் சிந்து, அவைத் தலைவராக டாக்டர் தியாகராஜன், துணை அவைத் தலைவராக மகாராஜன், கவுரவச் செயலாளராக சுருளிவேல், பொருளாளராக முகமது ஷேக் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 7 பெண்கள் உட்பட 25 பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.