/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பெரியாறு அணையில் நீர் திறப்பு 300 கன அடியாக குறைப்பு
/
பெரியாறு அணையில் நீர் திறப்பு 300 கன அடியாக குறைப்பு
பெரியாறு அணையில் நீர் திறப்பு 300 கன அடியாக குறைப்பு
பெரியாறு அணையில் நீர் திறப்பு 300 கன அடியாக குறைப்பு
ADDED : ஆக 20, 2024 04:30 AM
கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1511 கன அடியில் இருந்து 300 கன அடியாக குறைக்கப்பட்டது.
முல்லைப்பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த ஒரு வாரமாக மழை குறைந்தது. இருந்த போதிலும் தமிழகப் பகுதிக்கு கூடுதலாக திறக்கப்பட்டிருந்த 1511 கன அடி குறைக்கப்படவில்லை. இதனால் நீர்மட்டம் வெகுவாக குறையும் வாய்ப்புள்ளது, நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படலாம் என விவசாயிகள் புகார் கூறினர்.
இந்நிலையில் நேற்று காலை 6:00 மணியில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 300 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம்128.6 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பதிவாகவில்லை. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 737 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 4395 மில்லியன் கன அடியாகும். நேற்று பகல் முழுவதும் நீர்ப் பிடிப்பில் மேகமூட்டத்துடன் இருந்த போதிலும் மழை பெய்யவில்லை.
நீர்திறப்பு குறைக்கப்பட்டதால் லோயர்கேம்ப் பெரியாறு நீர் மின் நிலையத்தில் மின் உற்பத்தி 136ல் இருந்து 27 மெகாவாட்டாக குறைந்தது.