/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு மறுப்பு தீவனத்திற்கு தவிக்கும் நாட்டு மாடுகள்
/
வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு மறுப்பு தீவனத்திற்கு தவிக்கும் நாட்டு மாடுகள்
வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு மறுப்பு தீவனத்திற்கு தவிக்கும் நாட்டு மாடுகள்
வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு மறுப்பு தீவனத்திற்கு தவிக்கும் நாட்டு மாடுகள்
ADDED : ஆக 09, 2024 12:25 AM

ஆண்டிபட்டி: வனப்பகுதி மேய்ச்சல் நிலங்களில் நாட்டு மாடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வனத்துறை அனுமதி மறுப்பதால் தீவனத்துக்கு திண்டாடுகின்றன.
ஆண்டிபட்டி தாலுகாவில் தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, மஞ்சிநாயக்கன்பட்டி, பாலக்கோம்பை, மல்லையாபுரம், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை உட்பட பல கிராமங்களில் நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் வளர்க்கப்படுகின்றன. நாட்டு மாடுகளை கொட்டத்தில் அடைத்து தீவனம் கொடுத்து பராமரிப்பது இல்லை. தினமும் பல கி.மீ., தூரம் மேய்ச்சல் நிலங்களுக்கு ஒட்டிச் சென்று இரவில் கொட்டத்தில் அடைத்து விடுவர். நாட்டு மாடுகளை குறிப்பிட்ட சில விவசாயிகள் மட்டும் பாரம்பரியமாக பாதுகாத்து பராமரிக்கின்றனர். நாட்டு மாடுகள் தினமும் ஒரிரு லிட்டர் அளவில் மட்டுமே பால் தரும் என்பதால் விவசாயிகள் தங்கள் சொந்த தேவைக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
நாட்டு மாடுகளின் பால் வெளியில் விற்பனை செய்யப்படுவதில்லை. 50 முதல் 100 எண்ணிக்கையிலான நாட்டு மாடுகளை விவசாயிகள் ஒன்றுகூட்டி மலை, வனம் சார்ந்த பகுதியில் மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வர். கடந்த சில ஆண்டுகளாக வனப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் நாட்டு மாடுகளை வனத்துறையினர் அனுமதிப்பதில்லை.
இதனால் விவசாய நிலங்கள் சார்ந்துள்ள மேய்ச்சல் நிலங்கள், தரிசு நிலங்களில் மேய்ச்சலுக்காக நாட்டு மாடுகளை தினமும் ஓட்டிச் செல்கின்றனர்.
தற்போது ஆண்டிபட்டி பகுதியில் மேய்ச்சல் நிலங்கள் காய்ந்து கிடப்பதால் நாட்டு மாடுகள் தீவனத்திற்காக தவிக்கின்றன. வனப்பகுதியில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் என்று நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் வனத்துறையை வலியுறுத்தி வருகின்றனர்.