/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மண்டல டேக்வாண்டோ போட்டி கல்வி சர்வதேச பள்ளி சாம்பியன்
/
மண்டல டேக்வாண்டோ போட்டி கல்வி சர்வதேச பள்ளி சாம்பியன்
மண்டல டேக்வாண்டோ போட்டி கல்வி சர்வதேச பள்ளி சாம்பியன்
மண்டல டேக்வாண்டோ போட்டி கல்வி சர்வதேச பள்ளி சாம்பியன்
ADDED : ஆக 29, 2024 08:45 AM

தேவதானப்பட்டி: கல்வி சர்வதேச பொதுப் பள்ளியில் நடந்த டேக்வாண்டோ மண்டல அளவிலான போட்டியில் இப்பள்ளி மாணவிகள் தங்கப்பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.
தேவதானப்பட்டி கல்வி சர்வதேச பொதுப்பள்ளி உள்விளையாட்டு அரங்கத்தில், மதுரை சகோதயா ஸ்கூல் காம்ப்ளக்ஸ் நடத்தும் மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி நடந்தது. போட்டியை பள்ளி தலைவர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் கல்வி சர்வதேச பள்ளி, லட்சுமிபுரம் ஸ்ரீ ரோஸி வித்யாலயா பள்ளி, தேனி மேரி மாதா பள்ளி, சாந்தி நிகேதன் பள்ளி, கம்மவார் பள்ளி, வேலம்மாள் பள்ளி ஆகிய 6 பள்ளிகளிலிருந்து 14,17,19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், மாணவிகள் பங்கேற்றனர். மாணவிகள் அணியில் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவிகள் 14 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். வேலம்மாள் பள்ளி இரண்டாம் இடம் பெற்றது. மாணவர்களுக்கான போட்டிகள் நடந்து வருகிறது.
ஏற்பாடுகளை கல்வி பள்ளி முதல்வர் அருணா, துணை முதல்வர் ராஜலட்சுமி, டேக்வாண்டோ பயிற்சியாளர் ஜெயதேவா, உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.மேரி மாதா சி.எம்.ஐ., பள்ளி துணை முதல்வர் ஜெயலட்சுமி கண்காணிப்பாளராக செயல்பட்டார்.