/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி துவக்கம்
/
கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி துவக்கம்
கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி துவக்கம்
கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஆக 08, 2024 05:50 AM

மூணாறு: கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை சீரமைக்கும் பணி துவங்கியது.
கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, போடிமெட்டு இடையே ரோடு இரு வழி சாலையாக அகலப்படுத்தப்பட்டது. அப்போது அந்த வழியில் மூணாறு அருகே கேப் ரோட்டில் விதிமுறைகள் மீறி பாறைகள் உடைக்கப்பட்டன. அதனால் அப்பகுதியில் அடிக்கடி மண் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜூலை 30ல் பெய்த பலத்த மழையில் கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் ரோட்டில் விழுந்தன.
அதனால் அந்த வழியில் போக்குவரத்தை மாவட்ட நிர்வாகம் தடை செய்து உத்தரவிட்டது.
மாற்று வழி: அதன்பிறகு மூணாறில் இருந்து தேனிக்கு பள்ளிவாசல், குஞ்சுதண்ணி, ராஜாகாடு, ராஜகுமாரி வழியாக மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. அதனால் பஸ் கட்டணம் ரூ.15 அதிகரித்ததுடன் பயண நேரமும் அதிகரிப்பதால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
துவக்கம்: இந்நிலையில் கேப் ரோட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் நேற்று துவங்கியது. அப்பணிகள் பூர்த்தி செய்து, அந்த வழியில் ஓரிரு நாட்களில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.