/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் சட்டசபை தொகுதியில் இரு ஓட்டுச்சாவடிகளை பிரிக்க முடிவு வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
/
கம்பம் சட்டசபை தொகுதியில் இரு ஓட்டுச்சாவடிகளை பிரிக்க முடிவு வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
கம்பம் சட்டசபை தொகுதியில் இரு ஓட்டுச்சாவடிகளை பிரிக்க முடிவு வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
கம்பம் சட்டசபை தொகுதியில் இரு ஓட்டுச்சாவடிகளை பிரிக்க முடிவு வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் வெளியீடு
ADDED : செப் 03, 2024 05:02 AM

தேனி : மாவட்டத்தில் கம்பம் தொகுதியில் உள்ள இரு ஓட்டுச்சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ளதால் அந்த ஓட்டுச்சாவடிகளை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம்(தனி), போடி, கம்பம் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளில் 1225 ஓட்டுசாவடிகள் உள்ளன. ஓட்டுச்சாவடிகளில் 1500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், கிராமத்தில் இருந்து 2 கி.மீ., துாரத்திற்கு அப்பால் இருந்தால் அதனை பிரித்து அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வரைவு ஓட்டுச்சாவடிகள் பட்டியலை கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டார். உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., தாட்சாயினி முன்னிலை வகித்தார்.கலெக்டர் பேசுகையில், வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சி அலுவலகங்களில் இறப்பு சான்றிதழ் வழங்கியதும் அவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.
வருங்காலங்களில் பிறப்பு பதிவு செய்து 18 ஆண்டுகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதும், இறப்பு சான்றிதழ் வழங்கியதும் பெயர் நீக்கப்படுவதும் போன்றும் கொண்டு வர வாய்ப்புள்ளது. என்றார்.
கம்பம் சட்டசபை தொகுதியில் உள்ள எண் இலாஹி ஓரியண்டல் அராபிக் தொடக்கப்பள்ளி, ஆங்கூர் ராவுத்தர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்காளர்கள் எண்ணிக்கை 1500க்கு கூடுதாலக உள்ளது. அதனை இரண்டாக பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. மேலும், ஓட்டுச்சாவடிகள் பற்றிய தங்கள் கருத்துக்களை அரசியல் கட்சியினர், பொதுமக்கள் செப்.,8க்குள் கருத்து தெரிவிக்கலாம் என்றனர்.
நிகழ்ச்சியில் அரசியல் கட்சி நிர்வாகிகள் பா.ஜ., மாவட்ட துணைத்தலைவர் பாண்டியராஜ், தி.மு.க., வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஆசைத்தம்பி, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட குழு உறுப்பினர் ஜெயப்பாண்டி, ஆம் ஆத்மி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவாஜி மற்றும் தாசில்தார்கள் பங்கேற்றனர்.