/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இடுக்கியில் நிவாரண முகாம்; 114 பேர் தங்க வைப்பு
/
இடுக்கியில் நிவாரண முகாம்; 114 பேர் தங்க வைப்பு
ADDED : ஆக 02, 2024 06:57 AM
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை ஆகிய தாலுகாக்களில் ஐந்து நிவாரண முகாம்களில் 114 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடுக்கி மாவட்டத்தில்இரண்டு நாட்களாக பெய்த பலத்த மழையில் மண்சரிவு உள்பட பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன.
கடந்த இரண்டு நாட்களில் ஒரு வீடு முற்றிலும், எட்டு வீடுகள் சிறிய அளவிலும் சேதமடைந்தன. மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன் சோலை ஆகிய தாலுகாக்களில் ஐந்து நிவாரண முகாம்களில் 114 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தேவிகுளம் தாலுகாவில் மூணாறில் மவுண்ட் கார்மல் பேராலயம் கட்டடத்தில் 19 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேரும், சித்திராபுரம் அரசு உயர் நிலை பள்ளியில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும், அடிமாலியில் தனியார் பள்ளியில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் தங்கியுள்ளனர்.
அதே போல் உடும்பன்சோலை தாலுகாவில் கஜனாபாறை அரசு மேல்நிலை பள்ளியில் 8 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும், பாறத்தோடு சமுதாய கூடத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் தங்கியுள்ளனர்.