/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முதல் போக நெல் சாகுபடி விதை நெல் வாங்க தயக்கம்
/
முதல் போக நெல் சாகுபடி விதை நெல் வாங்க தயக்கம்
ADDED : மே 04, 2024 05:53 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் சாகுபடிக்கு விதை நெல் வாங்க விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
முல்லைப்பெரியாறு பாசனத்தில் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது.
கடந்தாண்டு திட்டமிட்டபடி ஜூன் முதல் தேதியில் முதல் போக நாற்றுகள் வளர்க்க தண்ணீர் திறக்கப்பட்டது.
கடந்தாண்டு ஜூன் முதல் தேதி அணையின் நீர் மட்டம் 118.4 அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனத்திற்கான 200 கன அடி திறக்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாததால், அணையின் நீர் மட்டம் 115 அடியாக உள்ளது. மழை பெய்தால் தான் நீர் மட்டம் உயரும்.
முதல் போக நெல் சாகுபடிக்கென விதை நெல் வாங்கி, வயலில் நாற்றாங்கால் அமைக்க ஒரு பகுதி தயார் செய்யப்படும். வேளாண் துறையும் விதை நெல் ஆர். என்.ஆர் ரகத்தை தயார் நிலையில் வைத்துள்ளது . போதிய மழை இல்லாததால் விவசாயிகள் அமைதி காத்து வருகின்றனர். விதை நெல் வாங்க ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.