/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தேர்தல் கெடுபிடியால் மொத்தமாக வேட்டி வாங்க தயக்கம்; உற்பத்தி செய்த கட்சி 'பார்டர்' கரை வேஷ்டிகள் தேக்கம்
/
தேர்தல் கெடுபிடியால் மொத்தமாக வேட்டி வாங்க தயக்கம்; உற்பத்தி செய்த கட்சி 'பார்டர்' கரை வேஷ்டிகள் தேக்கம்
தேர்தல் கெடுபிடியால் மொத்தமாக வேட்டி வாங்க தயக்கம்; உற்பத்தி செய்த கட்சி 'பார்டர்' கரை வேஷ்டிகள் தேக்கம்
தேர்தல் கெடுபிடியால் மொத்தமாக வேட்டி வாங்க தயக்கம்; உற்பத்தி செய்த கட்சி 'பார்டர்' கரை வேஷ்டிகள் தேக்கம்
ADDED : ஏப் 07, 2024 05:17 AM
அரசியல்வாதிகள், தொண்டர்கள் தாங்கள் இருக்கும் கட்சியின் அடையாளமாக குறிப்பிட்ட கலர்களில் கரைகள், பார்டர்கள் கொண்ட வேட்டிகள், துண்டுகளை அதிகம் பயன்படுத்துவர். அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், மற்றும் சில குறிப்பிட்ட விழா காலங்களில் வசதி படைத்த சிலர் தங்கள் கட்சி சார்ந்த தொண்டர்களுக்கு கட்சியின் கரை பதித்த வேட்டி, துண்டுகளை பரிசாக வழங்கி மகிழ்வர். பொன்னாடை போர்த்துவதற்கும் கட்சிகளின் 'பார்டர்' கொண்ட வேட்டிகளை வாங்கிச் செல்வதை பெருமையாக நினைத்துக் கொள்வர். ஒவ்வொரு முறையும் லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் மொத்தமாக கொள்முதல் செய்து நிர்வாகிகள் தொண்டர்களுக்கு அந்தந்த கட்சி சார்ந்த வி.ஐ.பி.,கள், வேட்பாளர்கள் சார்பில் வழங்கப்படும்.
எதிர்பார்த்த விற்பனை இல்லை
தற்போது லோக்சபா தேர்தலுக்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. கட்சி கரை பதித்த வேட்டிகளுக்கு தேவை அதிகம் இருக்கும் என்ற நம்பிக்கையில் உற்பத்தி செய்து இருப்பில் வைத்துள்ளனர்.
வியாபாரிகளும் திடீர் ஆர்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் 2 மீ., 4மீ., வெள்ளை பாலிஸ்டர், காட்டன் வேட்டிகளை வைத்துள்ளனர். விற்பனை இல்லாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அரசியல் பிரமுகர்கள் கூறுகையில், 'தற்போது தேர்தல் கமிஷன் அரசியல் கட்சியினர் நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. மொத்தமாக நுாற்றுக்கணக்கான வேட்டிகளை கொள்முதல் செய்து வினியோகிப்பது சிரமமான காரியம். கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும் இதற்கான எதிர்பார்ப்பில் இல்லை. தங்கள் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது: தற்போது சிக்கம்பட்டி விசைத்தறிகளில் குறைந்த அளவிலான வேட்டிகள் உற்பத்தி ஆகிறது. வெளியூர்களில் உற்பத்தியாகும் காரல் வேட்டிகளை மொத்தமாக வாங்கி வந்து இப்பகுதியில் ப்ராசஸ் செய்து விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளது. விலை ரூ.200 முதல் 500 வரை உள்ளது. தற்போது எதிர்பார்த்த விற்பனைதான் இல்லை என்றனர்.

