/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப்பின் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை
/
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப்பின் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப்பின் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை
தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்குப்பின் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த கோரிக்கை
ADDED : மே 08, 2024 01:40 AM
தேனி:'தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு அளித்த பின், முதுகலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்திட வேண்டும்.' என, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை சார்பில் மே 13 முதல் ஜூன் 30 வரை ஆசிரியர்கள் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளனர். மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் முதுநிலை ஆசிரியர்களுக்கு உள்ள ஒரே பதவி உயர்வு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு மட்டும் தான். அப்படியிருக்க ஆசிரியர்கள் கலந்தாய்வில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
அந்த பதவி உயர்விற்கான எந்த ஒரு தடையாணையும் இல்லாத நிலையில் அதனை நிறுத்தி வைப்பது ஏற்புடையது அல்ல. இதனால் நடப்பு கல்வி ஆண்டில் 500 மேல்நிலைப் பள்ளிகள் வரை தலைமை ஆசிரியர் இன்றி இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மூத்த முதுகலை ஆசிரியர்களுக்கு சரியான வாய்ப்புகள் கிடைத்திட தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்தி விட்டு, பின் முதுநிலை ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்ற சங்கத்தின் கோரிக்கையை முதல்வர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளோம் என்றார்.

