/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வி.ஏ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு விதிகளை தளர்த்த கோரிக்கை
/
வி.ஏ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு விதிகளை தளர்த்த கோரிக்கை
வி.ஏ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு விதிகளை தளர்த்த கோரிக்கை
வி.ஏ.ஓ.,க்களுக்கு பதவி உயர்வு விதிகளை தளர்த்த கோரிக்கை
ADDED : பிப் 23, 2025 02:20 AM
கம்பம்:பதவி உயர்வு வழங்குவதில் விதிகளை தளர்த்த வேண்டும் என்று வி.ஏ.ஓ.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருவாய்த் துறையில் கிராம உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் என்ற வரிசையில் பணியிடங்கள் உள்ளன.
கிராம உதவியாளர்கள் ( தலையாரிகள் ) 10 ஆண்டுகள் பணியாற்றினால் வி.ஏ.ஒ க்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. அவர்கள் எந்த தேர்வும் எழுத வேண்டியதில்லை. வி.ஏ.ஒ. க்கள் ஆறு ஆண்டுகள் பணியாற்றினால் வருவாய் ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஆனால் பதவி உயர்வு பெற ஆறு பாடப் பிரிவுகளில் தேர்வு எழுத வேண்டும். தேர்ச்சி பெற்றால் தான் பதவி உயர்வு. அதிலும் குரூப் 2 மூலம் தேர்வாகி வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கியபின் காலியிடம் இருந்தால் மட்டுமே பதவி உயர்வு கிடைக்கும்.
கிராம உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது போல் , பணிக்காலத்தை தகுதியாக கொண்டு, தேர்வுகளை ரத்து செய்து பதவி உயர்வு வழங்க வேண்டும் என வி.ஏ.ஓ.,க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்க மாவட்ட செயலாளர் ராமர் கூறுகையில், 'வி.ஏ.ஓ.,வாக ஆறு ஆண்டுகள் பணியாற்றியவருக்கு வருவாய் ஆய்வர், 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு துணை வட்டாட்சியர் பதவி உயர்வு , தேர்வு எழுதாமல் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.