ADDED : ஜூலை 27, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
தேனி, ஜூலை 28–
தேனி பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் ‘அபோர்டபிளிட்டி’ பிரிவை நீக்குதல், 3வது ஊதியக்குழு பரிந்துரைப்படி சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பி.எஸ்.என்.எல்.
தலைமைக்கு டுவிட்டர் மூலம் தெரியப்படுத்தும் நுாதன போராட்டம் நடந்தது. அனைந்திந்திய பி.எஸ்.என்.எல்., டாட் ஓய்வூதியர்கள் சங்கம் உள்பட 3 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ராமன், செந்தில் குமார், பழனிவேல் ராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். அவர்கள் முன்னிலையில் பி.எஸ்.என்.எல்., பணியாளர்கள் 20 பேர் டுவிட்டரில் தலைமை அலுவலகத்திற்கு தங்கள் கோரிக்கைகளை பதிவிட்டனர்.
