/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விடுதி அறையில் முதியவர் இறந்த நிலையில் மீட்பு
/
விடுதி அறையில் முதியவர் இறந்த நிலையில் மீட்பு
ADDED : ஜூன் 19, 2024 05:20 AM
தேனி, : தேனி பாரஸ்ட் ரோடு ஐந்தாவது தெரு இளங்கோ 53. திருமணம் முடிக்காமல் தனியாக வசித்து வந்தார்.
உறவினர்கள் இருந்தும், தேனி பெரியகுளம் ரோட்டில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்தார். கடந்த ஒரு வாரமாக ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில், அவர் தங்கிய அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. விடுதியில் பணியாற்றுபவர்கள் தேனி போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அறையின் கதவை திறந்து பார்த்தபோது, இளங்கோ, இறந்து ஒருவாரமான நிலையில் கட்டிலில் படுத்து உறங்கிய நிலையில், இறந்து கிடந்தார்.
துர்நாற்றம் வீசிய நிலையில் போலீசார் உடலை மீட்டு தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரிக்கின்றனர்.