/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வனவிலங்குகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நீர்தேக்கம் அமைப்பு கேரள வனத்துறை ஏற்பாடு

ADDED : ஏப் 04, 2024 04:16 AM

மூணாறு : குடியிருப்பு, மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகள் ஆகியவற்றில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வனங்களில் நீர்நிலைகள் அமைக்கப்பட்டன.
மூணாறு பகுதியில் சமீபகாலமாக காட்டு யானை, காட்டு மாடு ஆகியவை மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் குடியிருப்பு, மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் நடமாடுகின்றன. காட்டு யானைகளால் உயிர், பொருள் சேதங்கள் ஏற்பட்டன. வனம், காடு ஆகியவற்றில் தீவனம், தண்ணீர் ஆகியவை பற்றாக்குறையால் வனவிலங்குகள் அங்கிருந்து வெளியேறி ஊர் பகுதிகளில் நடமாடுவதாக புகார் எழுந்தது.
அதனால் வனவிலங்கு களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவை அதிகம் உள்ள மூணாறு, தேவிகுளம் வனசரகத்தில் பெட்டிமுடி, குண்டுமலை, இட்லி மொட்டை, மீசைபுலிமலை, தீர்த்தமலை ஆகிய பகுதிகளில் வனங்களில் வனத்துறையினர் நீர் தேக்கங்களை அமைத்தனர்.
அதேபோல் மூணாறு வனவிலங்கு துறை பிரிவு சார்பில் பாம்பாடும் சோலை, பட்டியாங்கல் ஆகிய பகுதிகளில் பயனற்ற தாவரங்களை வெட்டி அகற்றி விட்டு 100 ஏக்கரில் புல் மேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 350 எக்டேரில் புல் மேடுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தீவனம், தண்ணீர் ஆகியவை எளிதில் கிடைக்கும் பட்சத்தில் வனங்களை விட்டு வெளியேற வாய்ப்புகள் குறைவு என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.