ADDED : ஏப் 16, 2024 04:48 AM
பெரியகுளம்: பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். வி.சி., கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ரபீக் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
தி.மு.க., வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், சரவணக்குமார் எம். எல்.ஏ., நிர்வாகிகள். அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட இணை செயலாளர் முத்துலட்சுமி தலைமையில் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், நகர செயலாளர் பழனியப்பன். அ.ம.மு.க., அமைப்பு செயலாளர் கதிர்காமு தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு அமைப்பு செயலாளர் மஞ்சுளா, ஒன்றிய செயலாளர் செல்லமுத்து,நகர செயலாளர்அப்துல் சமது. பா.ஜ., லோக்சபா தொகுதி பொறுப்பாளர் ராஜபாண்டியன் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி:அ.தி.மு.க., தேர்தல் அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் கட்சியினர் மரியாதை செலுத்தினர். வேட்பாளர் நாராயணசாமி, மாவட்ட செயலாளர்கள் ஜக்கையன், ராமர், அமைப்பு செயலாளர் மகேந்திரன், முன்னாள் எம்.பி., பார்த்திபன், முன்னாள் எம்.எல்.ஏ., கணேசன், தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

