/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஜாதி சான்றிதழ் பெற கட்டுப்பாடு:கேரள அரசின் உத்தரவால் தமிழர்கள் தவிப்பு
/
ஜாதி சான்றிதழ் பெற கட்டுப்பாடு:கேரள அரசின் உத்தரவால் தமிழர்கள் தவிப்பு
ஜாதி சான்றிதழ் பெற கட்டுப்பாடு:கேரள அரசின் உத்தரவால் தமிழர்கள் தவிப்பு
ஜாதி சான்றிதழ் பெற கட்டுப்பாடு:கேரள அரசின் உத்தரவால் தமிழர்கள் தவிப்பு
ADDED : ஜூலை 05, 2024 05:20 AM
மூணாறு: ஜாதி சான்றிதழ் பெற கேரள அரசு கடும் கட்டுப்பாடு விதித்ததால் தமிழர்கள் தவித்து வருகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், உடும்பன்சோலை, பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். அதில் தேவிகுளம் தாலுகாவில் மூணாறு பகுதியில் வசிக்கும் தமிழர்கள் ஜாதி சான்றிதழ் பெற 1950ம் ஆண்டுக்கு முன்பு கேரளாவில் குடியேறியதாக ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு கடும் கட்டுப்பாடு விதித்தது. அதில் ஆதிதிராவிடர் பிரிவைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த கட்டுப்பாட்டின் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கட்டுப்பாடு கடந்த சில ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள போதும் சமீபகாலமாக கடுமையாக கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலானோரிடம் ஆவணங்கள் இல்லாததால் ஜாதி சான்றிதழ் பெற இயலாமல் கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு வகைகளில் மாணவர்கள் பாதிக்கப்பட்டு எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது.
இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூ., சேர்ந்த தேவிகுளம் எம்.எல்.ஏ.ராஜா ஆதிதிராவிடர் என பொய்யான ஆவணங்களை தாக்கல் செய்து தேர்தலில் போட்டியிட்டதாக கூறி அவரை எதிர்த்து போட்டியிட்டவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஜாதி சான்றிதழ் வழங்க வருவாய் துறையினர் கடுமையான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
மூணாறில் எம்.எல்.ஏ., உள்பட மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிற் சங்கத்தினர் என அனைவரும் தமிழர்கள் என்றபோதும் ஜாதி சான்றிதழ் பிரச்னையில் தலையிடாமல் வேடிக்கை பார்த்து வருகின்றனர். தமிழர்களை புறக்கணிக்கும் வகையிலான அரசின் நடவடிக்கையை எதிர் கொள்ள யாரும் தயாரில்லை என்பதால் அகதிகளாகவும், கொத்தடிமைகளை போன்றும் வாழும் சூழல் நிலவுகிறது.