ADDED : செப் 04, 2024 01:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தேனி கலெக்டர் அலுவலகம் முன் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், அரசாணை 204ல் வலியுறுத்தியபடி ஓய்வூதியர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சையை உறுதிப்படுத்த கோரி தர்ணா போராட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் அரங்கசாமி தலைமை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர் மணி வரவேற்றார். மாவட்டத் துணைத் தலைவர் நடராஜன், தேனி வட்டக்கிளைத் தலைவர் ராஜா, செயலாளர் கருப்பையா, மாவட்டச் செயலாளர் ஆண்டவர், மாவட்டத் துணைத் தலைவர் வீரணன், முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் சவுகத் அலி ஆகியோர் பேசினர்.
மாநிலச் செயலாளர் பாலுச்சாமி நிறைவுரை ஆற்றினார்.
மாவட்டப் பொருளாளர் நாகராஜ் நன்றி தெரிவித்தார்.