/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மூணாறில் வெப்பம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
/
மூணாறில் வெப்பம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மூணாறில் வெப்பம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மூணாறில் வெப்பம் அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
ADDED : ஏப் 27, 2024 05:14 AM
மூணாறு: மூணாறில் ஏப்ரலில் இயல்பை விட கடந்த இரண்டு நாட்களாக பகலில் வெயில் சுட்டெரித்ததால் வெப்பம் அதிகரித்தது.
'தென்னகத்து காஷ்மீர்' என வர்ணிக்கப்பட்டு குளுமைக்கு பிரசித்து பெற்ற மூணாறில் காலநிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆண்டு தோறும் மார்ச்சில் கோடை காலம் துவங்கி மே இறுதி வரை நீடிக்கும். அப்போது மே மாதத்தில் முதல் இரண்டு வாரங்கள் வெப்பம் சற்று அதிகரிக்கும்.
இந்தாண்டு கோடை மழை பொய்த்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வெப்பம் அதிகரித்தது. இதனிடையே கடந்த இரண்டு நாட்களாக இயல்பை விட பகலில் வெயில் சுட்டெரித்ததால் வெப்பம் கடுமையாக அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை அதிகபட்சமாக வெப்பம் 11 டிகிரியாக இருந்த நிலையில் பகலில் 30 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. அதேபோல் நேற்று காலை அதிகபட்சமாக வெப்பம் 9 டிகிரியாக இருந்த நிலையில் பகலில் 31 டிகிரி செல்சியஸ்சாக உயர்ந்தது. சமீபகாலமாக இது போன்று வெப்பம் அதிகரித்தது இல்லை. தற்போது வெப்பம் இயல்பை விட அதிகரித்துள்ளதால் குளுமையை தேடி வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

