/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்
/
தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்
ADDED : ஜூலை 13, 2024 04:36 AM
போடி : தேனியில் இருந்து போடிக்கு வரும் வழித்தடத்தில் அமைந்துள்ளது போஜன் பார்க். இந்த ரோட்டில் தமிழக, கேரளா செல்லும் வாகனங்கள், தேனியில் இருந்து போடி செல்லும் பஸ்களும் வந்து செல்கின்றன.
போடி போஜன் பார்க்கில் இருந்து கட்டபொம்மன் சிலை வரை வளைந்து செல்லும் வகையில் பாதை குறுகலாகவும், சாக்கடை தடுப்புச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடவும் முடியாத நிலை ஏற்படுகிறது. சில நேரங்களில் வளைவில் திரும்பும் போது ஆபத்தை ஏற்படுத்துகிறது. பின்னால் வரும் வாகனங்களால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
விபத்து ஏற்படும் முன் குறுகலான பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை தடுப்பு சுவர், எச்சரிக்கை பலகை அமைத்திட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.