/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போடிமெட்டு மலைப்பாதையில் தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்; தொடர் மழையால் மண், பாறைகள் சரிவு
/
போடிமெட்டு மலைப்பாதையில் தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்; தொடர் மழையால் மண், பாறைகள் சரிவு
போடிமெட்டு மலைப்பாதையில் தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்; தொடர் மழையால் மண், பாறைகள் சரிவு
போடிமெட்டு மலைப்பாதையில் தடுப்புச் சுவர் இன்றி விபத்து அபாயம்; தொடர் மழையால் மண், பாறைகள் சரிவு
ADDED : ஜூலை 02, 2024 06:34 AM

போடி : தமிழக, கேரளாவை இணைக்கும் போடிமெட்டு மலைப் பாதையில் பல இடங்களில் தடுப்புச்சுவர் இன்றியும், மழையால் ரோடு அரிப்பு ஏற்பட்டு உள்ளதால் ஆபத்தான நிலையில் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
தேனியில் இருந்து மூணாறு ரோட்டில் தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் அமைந்துள்ளது போடிமெட்டு. தேனியில் இருந்து 22 கி.மீ., சமவெளியில் சென்றால் போடி முந்தல் என்ற இடத்தை அடையலாம். இங்கிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப் பகுதியை கடந்து 22 கி.மீ. மலைப் பகுதியில் சென்றால் தமிழகத்தின் எல்லை போடிமெட்டு மலைப்பகுதி உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4644 அடி உயரத்தில் போடிமெட்டு அமைந்துள்ளது. மூணாறு செல்லஅதிக அளவில் சுற்றுலா பயணிகள் போடிமெட்டு மலைப்பாதை வழியாக வந்து செல்கின்றனர். 11 ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.17 கோடி செலவில் 18 அடி ரோடாக இருந்த போடிமெட்டு ரோட்டை 24 அடியாக அகலப்படுத்தப்பட்டது.
ரோடு அகலப்படுத்த பாறைகளுக்கு வெடி வைத்தாலும், மழைகாரணமாக அடிக்கடி மண் சரிவுகள் ஏற்பட்டன. இதனால் போடி - மூணாறு போக்குவரத்து அடிக்கடி பாதித்தது. சில ஆண்டுகளாக பெரிய அளவில் மழை இல்லாததால் மண்சரிவு ஏற்படாத நிலை இருந்தது.
கடந்த சில நாட்களாக தமிழக, கேரளா பகுதி மட்டுமின்றி போடிமெட்டு மலைப்பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக சில இடங்களில் லேசான மண்சரிவு ஏற்பட்டு, தொங்கி கொண்டிருந்த பாறைகள் உருண்டு விழுந்து உள்ளன. பல இடங்களில் ரோடு அரிப்பு ஏற்பட்டு பள்ளங்களாக மாறி உள்ளன.
இந்நிலையில் போடிமெட்டு மலைப் பாதையில் தடுப்புச் சுவர்கள், இரும்பு கிராஸ் பேரியர் இல்லை. இரவில் வாகனங்கள் செல்ல உதவிட ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்ட வில்லை. இதனால் ஆயிரம் அடிக்கு மேல் பள்ளமாக உள்ள இந்த ரோட்டில் ஆபத்தான நிலையில் வாகனங்களை செல்ல வேண்டியுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். வேகமாக வரும் வாகனங்களில் சில நேரங்களில் பிரேக் பிடிக்காத நிலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு காயம் ஏற்படுவதோடு, உயிர் பலியாகும் அபாயம் உள்ளது.
சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் நலன் கருதி விழும் நிலையில் உள்ள பாறைகளை அகற்றி, சேதம் அடைந்த ரோட்டை சீரமைக்கவும், கிடப்பில் போடப்பட்ட தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.