/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆட்டோக்களால் விபத்து அபாயம்; வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்
/
ஆட்டோக்களால் விபத்து அபாயம்; வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்
ஆட்டோக்களால் விபத்து அபாயம்; வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்
ஆட்டோக்களால் விபத்து அபாயம்; வாகன சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்
ADDED : ஏப் 03, 2024 07:10 AM

தேனி: தேனியில் அச்சுறுத்தும் வகையில் இயங்கும் ஆட்டோக்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
தேனி நகர்பகுதியில் அதிக ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்கள் தேனி பதிவெண் மட்டுமன்றி திருச்சி, மதுரை, தஞ்சை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பிற மாவட்டங்களின் பதிவெண்களுடன் அதிகம் இயங்குகின்றன. இவற்றில் பெரும்பாலான ஆட்டோக்கள் உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்படுவது கடந்த மாதம் தேனி, பழனிசெட்டிபட்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடந்த சோதனையில் உறுதி செய்யப்பட்டன. சோதனையில் 35 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்நது நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களின் எண்ணிக்கை குறைந்தது.
தற்போது போலீசார் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டுவதால் மீண்டும் ஆட்டோக்கள் எண்ணிக்கை அதிகரிக்க துவங்கி உள்ளன. குறிப்பாக மதுரை ரோட்டில் பகவதி அம்மன் கோயில் தெரு நுழைவாயில், கம்பம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டை மறித்து ஆட்டோக்கள் நிறுத்துவதால் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகுகின்றனர். பெரியகுளம் ரோட்டில் இயக்கப்படும் ஆட்டோக்கள் பெரும்பாலும் 'இன்டிகேட்டர்' பயன்படுத்தாம் அனைத்து இடங்களிலும் பின் வரும் வாகனங்களை பார்க்காமல் நிறுத்து கின்றனர். இதனால் பல விபத்துக்கள் அரங்கேறுகின்றன. போலீசார், வட்டார போக்குவரத்து அலுவலர் இணைந்து நகர்பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

