/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடிநீர் தட்டுப்பாடால் ரோடு மறியல்
/
குடிநீர் தட்டுப்பாடால் ரோடு மறியல்
ADDED : ஏப் 28, 2024 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவதானப்பட்டி, : ஏ.வாடிப்பட்டி ஊராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொது மக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டி அருகே ஏ.வாடிப்பட்டி ஊராட்சியில் பத்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொது மக்கள் காலி குடங்களுடன் ஏ.வாடிப்பட்டி பஸ் ஸ்டாப்பிற்கு வந்து ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஜெயமங்கலம் போலீசார் ஊராட்சி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பழுதான மின்மோட்டார் சீரமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும் எனக் கூறிய பின், அனைவரும் கலைந்து சென்றனர். ஒரு மணிநேரம் ரோடு மறியல் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

