/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டோர கடைகளில் செயற்கை நிறமி அதிகம் கலப்பு
/
ரோட்டோர கடைகளில் செயற்கை நிறமி அதிகம் கலப்பு
ADDED : மார் 01, 2025 06:07 AM
போடி : போடி பகுதியில் ரோட்டோர கடைகள், ஓட்டல்களில் உணவு திண்பண்டங்களில் அதிக செயற்கை நிறமிகள் கலப்பதால் இதனை சாப்பிடுவோர் உடல் நலம் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது.
தமிழக, கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் போடி அமைந்து உள்ளது. பூப்பாறை, நெடுங்கண்டம், மூணாறு செல்ல போடி வழியாக கேரளா செல்கின்றனர்.
இவர்கள் பெரும்பாலும் போடி பகுதியில் உள்ள ஓட்டல்கள், ரோட்டோர கடைகளில் உணவு சாப்பிட்டு செல்கின்றனர். இரவில் செயல்படும் ரோட்டோர தள்ளு வண்டிகளில் பாஸ்ட்புட் உணவை பலரும் சாப்பிட்டு செல்கின்றனர். பல ரோட்டோர கடைகள், தள்ளு வண்டிகள், ஓட்டல்களில் உணவு வகைகளை செயற்கை நிறமிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். அவற்றை சாப்பிட்டு செல்வோர் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பகலில் பெயரளவிற்கு பெட்டி கடைகளில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளாமல், போடியில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் பகல், இரவு நேரங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.