/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குழந்தை கடத்தல் கும்பலா தொழிலாளர்கள் சுற்றி வளைப்பு
/
குழந்தை கடத்தல் கும்பலா தொழிலாளர்கள் சுற்றி வளைப்பு
குழந்தை கடத்தல் கும்பலா தொழிலாளர்கள் சுற்றி வளைப்பு
குழந்தை கடத்தல் கும்பலா தொழிலாளர்கள் சுற்றி வளைப்பு
ADDED : ஏப் 06, 2024 05:13 AM
மூணாறு : மூணாறு அருகே குழந்தைகள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என கருதி பீஹாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
பீஹாரைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் மூணாறில் தங்கி சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்து வந்தார்.
அவர் நேற்று முன்தினம் மாலை குண்டுமலை எஸ்டேட் சோத்துப்பாறை பகுதிக்கு விற்பனைக்குச் சென்றார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த தொழிலாளர்கள் குழந்தைகளை கடத்தும் கும்பலை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என எண்ணி சுற்றி வளைக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பியதால் அவரை குறித்து போட்டோவுடன் 'வாட்ஸ் அப்'பில் பதிவிட்டனர். அதனை வைத்து அடையாளம் கண்ட குண்டுமலை எஸ்டேட் அப்பர் டிவிஷனைச் சேர்ந்த தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டவரை சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
மூணாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். அங்கு விசாரணைக்கு பின் அவரை விடுவித்தனர்.

