/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது
/
ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்: இருவர் கைது
ADDED : செப் 14, 2024 11:12 PM

கூடலுார்:தமிழக - கேரள எல்லையான குமுளியில் ரூ.10 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரை கைது செய்தனர்.
கேரளாவில் ஓணம் பண்டிகை இன்று நடைபெறுவதை முன்னிட்டு தமிழக கேரள எல்லையான குமுளியில் இரு மாநில போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
தமிழக பகுதியில் இருந்து வந்த காரை சோதனை செய்த போது சிறு பிளாஸ்டிக் கவர்களில் மறைத்து கடத்திச் சென்ற சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட எம்.டி.எம்.ஏ., (மெத்தலின் எடியோக்கி மெத்தாம்பேட்டமைன்) எனப்படும் போதைப்பொருள் 60 கிராம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கார், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த போதைப் பொருளின் மதிப்பு சர்வதேச அளவில் கிலோவுக்கு சுமார் ரூ.2 கோடி வரை விலை உள்ளது. இது மில்லிகிராம் அளவில்தான் விற்பனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக குமுளியைச் சேர்ந்த பிக்கு 42, வர்கீஸ் 37, ஆகிய இருவரை கைது செய்தனர். போதைப் பொருள் எங்கிருந்து வந்தது என விசாரித்து வருகின்றனர்.