/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேலை ஆசைகாட்டி ரூ.10.81 லட்சம் மோசடி
/
அரசு வேலை ஆசைகாட்டி ரூ.10.81 லட்சம் மோசடி
ADDED : ஜூலை 13, 2024 10:16 PM

போடி:தேனி மாவட்டம், போடி, டி.வி.கே.கே., நகரை சேர்ந்தவர் தனம், 50. இவரது மகன் குருபிரசாத். இவர், ஆண்டிபட்டியில் உள்ள மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் மாலை நேர வகுப்பில் எம்.ஏ., படித்து வருகிறார். இவருக்கு அங்கு வேலை பார்க்கும் டிப்போரால் என்ற பெண்ணிடம் நட்பு ஏற்பட்டது.
டிப்போரால் தேனி பாரஸ்ட் சாலையில் வசிக்கும் முருகன், 36, சென்னையை சேர்ந்த கணேசனை அறிமுகப்படுத்தினார். இரு ஆண்டுகளுக்கு முன் குருபிரசாத்திற்கு அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, குருபிரசாத் வங்கி கணக்கு வாயிலாக, அவரது தாய் தனத்திடம் நேரடியாகவும் டிப்போரால், முருகன், கணேசன் சேர்ந்து 10 லட்சத்து, 81,000 ரூபாய் வாங்கினர்.
வேலை வாங்கி தராமலும் பணத்தை திரும்ப தராமலும் ஏமாற்றினர். இவ்வழக்கில் போடி போலீசார் முருகனை கைது செய்தனர். கணேசன், டிப்போராலை தேடுகின்றனர்.