/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு வேலை ஆசைக்காட்டி ரூ.1.37 கோடி மோசடி
/
அரசு வேலை ஆசைக்காட்டி ரூ.1.37 கோடி மோசடி
ADDED : ஆக 07, 2024 07:58 PM

தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வண்டியூர் கண்ணன் நகர் பிரகாஷ், 41. இவர் 2017ல் மதுரை - முத்தாலம்பாறை செல்லும் அரசு பஸ்சில் கண்டக்டராக பணிபுரிந்தார். இவருக்கும் கொடுவிலார்பட்டி ஐஸ்வர்யா நகர் மகாலட்சுமிக்கும் பஸ் பயணத்தில் அறிமுகம் ஏற்பட்டது. மகாலட்சுமி தனக்கும், தன் உறவினர் திருப்பூர் நாகேந்திரகுமார், ஆண்டிபட்டி சீனிவாசா நகர் பாலமுருகன், 42, ஆகியோருக்கு அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் பலரை தெரியும்.
நபருக்கு 6 லட்சம் ரூபாய் வீதம் கொடுத்தால், அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறினார். அதனை நம்பிய கண்டக்டர் கடந்த 2020 ஜூன் 15ல், எட்டு பேரிடம் தலா 6 லட்சம் ரூபாய் வீதம் 48 லட்சம் ரூபாயை மகாலட்சுமி, நாகேந்திரகுமாரிடம் வழங்கினார். பணத்தை பெற்ற பின்னர் அவர்கள் வழங்கிய பணி ஆணை போலி என தெரியவந்தது.
இதேபோல் அல்லிநகரத்தைச் சேர்ந்த 14 பேரிடமும் பணம் பெற்று, மொத்தம் 1 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்தனர். பிரகாஷ் புகாரின்படி, தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பாலமுருகனை கைது செய்தனர். நாகேந்திரகுமார் வேறொரு வழக்கில் கைதாகி விருதுநகர் சிறையில் உள்ளார். மகாலட்சுமியை தேடி வருகின்றனர்.