ADDED : ஜூலை 05, 2024 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் கலெக்டர் உத்தரவில் உணவு பாதுகாப்புத்துறையினர், போலீசார், உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து போதைப்பொருட்கள் விற்பனை தொடர்பாக சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதில் 387 கடைகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் 961 கிலோ பறிமுதல் செய்து அழித்தனர். விற்பனை செய்த கடைகளுக்கு ரூ.59.65 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.