/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரூ.84.50 லட்சம் மோசடி வழக்கு டில்லி வாலிபருக்கு குண்டாஸ்
/
ரூ.84.50 லட்சம் மோசடி வழக்கு டில்லி வாலிபருக்கு குண்டாஸ்
ரூ.84.50 லட்சம் மோசடி வழக்கு டில்லி வாலிபருக்கு குண்டாஸ்
ரூ.84.50 லட்சம் மோசடி வழக்கு டில்லி வாலிபருக்கு குண்டாஸ்
ADDED : ஆக 24, 2024 09:20 PM

தேனி:ஓய்வு பெற்ற ஐ.ஐ.டி., பேராசிரியை பானுமதியை 74, ஏமாற்றி வங்கி கணக்கில் இருந்து நுாதன முறையில் ரூ.84.50 லட்சத்தை மோசடி செய்த அபிஜித்சிங் 36, என்பவரை தேனி போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் பானுமதி. இவர் சென்னை ஐ.ஐ.டி., மற்றும் அமெரிக்க பல்கலையில் பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது சிம்கார்டை பயன்படுத்தி ஹவாலா பணபரிவர்த்தனை நடந்துள்ளதாகவும், அதனை விசாரிக்க வேண்டும் என போலீசார் பேசுவது போல் கடந்த மே மாதம் ஒருவர் இவரிடம் பேசி வங்கி கணக்கில் இருந்த பணத்தை குறிப்பிட்ட கணக்கிற்கு அனுப்ப கூறினர். பணத்தை விசாரணைக்குபின் தருவதாக தெரிவித்தனர்.
இதனை நம்பி பானுமதி வங்கி கணக்கில் இருந்த ரூ.84.50 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு மாற்றினார். இது பற்றி யாரிடமும் கூற கூடாது எனவும், டிஜிட்டல் முறையில் கைது செய்ததாகவும் எதிர்முனையில் பேசியவர் கூறி மிரட்டினார்.பணத்தை இழந்த பானுமதி , தேனி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
நுாதன மோசடியில் ஈடுபட்ட டில்லி துவாரகா பகுதியை சேர்ந்த அபிஜித்சிங்கை போலீசார் கைது செய்து ரூ.44,000, ஐந்து அலைபேசி, லேப்டாப், செக்புக், 103 டெபிட், கிரிடிட் கார்டுகளை பறிமுதல் செய்தனர். இந்நிலையில் எஸ்.பி., சிவபிரசாத் பரிந்துரையில் அபிஜித்சிங்கை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

