/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ருக்மணி சத்யபாமா கோபால கிருஷ்ணன் கோயிலில் இன்று மகா கும்பாபிேஷகம் கோபாலபுரத்தில் கோலாகல விழா

ADDED : ஆக 23, 2024 05:56 AM

தேனி: தேனி ஒன்றியம், கோபாலபுரத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா, கோபாலகிருஷ்ணன் கோயில் கும்பாபிேஷகம் இன்று காலை நடக்கிறது.
இக் கிராமத்தில் ராதாகிருஷ்ணன் பஜனை மடம் அமைத்து பக்தர்கள் பெருமாளை வழிபட்டு வந்தனர். அதன் அருகில் 1934ல் பள்ளி கூடமும் துவங்கினர். பஜனை மடத்தை 1986ல் விரிவுபடுத்தி, சித்ரா பவுர்ணமி வழிபாட்டை சிறப்பாக கொண்டாடினர். சுவாமியை ஊர்வலமாக அழைத்து வந்து வழிபட்டனர்.
மடத்தை கோயிலாக எழுப்பி பெருமாளுக்கு வழிபாடு நடத்த கிராமத்தினர் விரும்பினர். 2019ல் பெருமாளுக்கு கோயில் அமைக்க இடத்தேர்வு செய்யும் பணி நடந்தது. அப்போது வந்த நபர் கம்பம் கோயிலில் ( தற்போது கோயில் அமைந்துள்ள இடத்திற்கு தெற்கு பகுதியில் கம்பம் வைத்து வழிபாடு நடத்திய இடம்) விளக்கேற்றி வழிபாடு நடத்துங்கள். விரைவில் கோயில் எழுப்பப்படும் என்றார். அதைத்தொடர்ந்து கிராமத்தினர் கம்பம் கோயிலில் விளக்கேற்றி வழிபாடு நடத்தி வந்தனர்.கோபாலபுரத்தில் இருந்து திருப்பூர், கோவையில் நிறுவனம் நடத்திய உறவினர்கள் கோயில் கட்டும் பணியை முன்னெடுத்தனர். இதற்கு வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் ஆதரவு பெருகியது. பஜனை மடம் இருந்த இடத்தில் கோயில் அமைக்க முடிவு செய்து திருப்பணி துவங்கியது. ஓராண்டில் பணிகள் முடிவடைந்தது. இன்று (ஆக. 23) கும்பாபிஷேகம் காலை 8:00 மணி முதல் 9:25 மணிக்குள் மகா கும்பாபிேஷகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருப்பூர் ஸ்வெல்நைட் நிறுவன நிர்வாகிகள் கே.ஜி.கணேசன் கவிதா, கோவை சிம்டெக் இன்டஸ்ரிஸ் கே.கே.கோபால்சாமிவீரம்மாள், அம்பாசமுத்திரம் மணிகண்ணன் கிருஷ்ணவேனி, கோபாலபுரம் கம்மவார் உறவின்முறை சங்கத்தினர் செய்தனர்.