/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ருக்மணி சத்யபாமா கோபால கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்

ADDED : ஆக 24, 2024 05:15 AM

தேனி: தேனி ஒன்றியம்,கோபாலபுரம் கம்மவார் உறவின்முறை நிர்வகிக்கும் ருக்மணி சத்யபாமா கோபாலகிருஷ்ணன் கோயில் மகா கும்பாபிஷேக நேற்று நடந்தது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முதல் கால யாக பூஜை ஆக.,21ல் துவங்கியது. ஆக. 22ல் காலை 8:00 மணிக்கு 2ம் கால யாக வேள்வியுடன் பூஜைகள் தொடர்ந்தது. நேற்று காலை 8:00 முதல் 09:25 மணிக்குள் திருகோஷ்டியூர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம அய்யங்கார் தலைமையில் வேத விற்பன்னர்கள் கோபுரல கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது 'கோவிந்தா, கோவிந்தா ' கோஷம் முழங்க ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.
திருக்கல்யாணம்
மதியம் 1:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடந்தது. இதில் பெண்கள், அனைத்து சமூக பொது மக்கள் பங்கேற்றனர்.
நன்கொடையாளர்களுக்கு கோயில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். விழாவில் இளங்கோ - செல்வராணி, கணேசன் - கவிதா, மணிகண்டன் - வினிதா, கோகுலகண்ணன் - கவுசல்யா, முருகேசன் - சாந்தி, சிங்கப்பூரை சேர்ந்த செந்தில்குமார் - நாகஜோதி, குருசாமி - தேவகி, ரமேஷ் - காந்திமதி, கோபாலபுரம் ஏ.கே.பி., கோவையை சேர்ந்த கோபால்சாமி குடும்பத்தினர், சந்தானம் - சத்தியபாமா குடும்பத்தினர், பி.ஆர்.ஜி., டிரேடர்ஸ், ராஜேஷ் - ஜோதிலட்சுமி, நிர்மல் - அபிநயா, கவுமாரியம்மன் ஸ்வீட்ஸ் உரிமையாளர் லட்சுமணன், பிரகாஷ் புளூ மெட்டல் உரிமையாளர் வசந்த் உள்ளிட்ட பங்கேற்றனர்.