/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தமிழகத்தில் ஏழைகளுக்கான ஆட்சி; மத்தியில் பணக்காரர்களுக்கான ஆட்சி: தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் சிவா பேச்சு

ADDED : ஏப் 11, 2024 06:27 AM
போடி : தமிழகத்தில் ஏழைகளுக்கான ஆட்சியும், மத்தியில் பணக்காரர்களுக்கான ஆட்சி நடப்பதாக போடியில் தி.மு.க., வேட்பாளர் தங்கத் தமிழ்செல்வனை ஆதரித்து தி.மு.க., கொள்கை பரப்பு செயலாளர் சிவா பேசினார்.
போடியில் அவர் பேசியதாவது: 10 ஆண்டுகளில் பா.ஜ., ஆட்சியில் இயற்றிய சட்டங்கள், செயல்படுத்திய திட்டங்கள் அனைத்தும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளன. பணக்காரர்களுக்கு சாதகமாகவும், ஏழைகளுக்கு எதிராகவும் உள்ளது. காங்., ஆட்சியில் பெட்ரோல் ரூ. 60 ஆகவும், காஸ் சிலிண்டர் ரூ. 500 ஆக இருந்தது. பா.ஜ., ஆட்சியில் பெட்ரோல் விலை ரூ.100 ஆகவும்,காஸ் சிலிண்டர் ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் விவசாயிகள் 11,502 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
வியாபாரிகள் ஜி.எஸ்.டி., வரியால் பதிக்கப்பட்டு உள்ளனர். பணக்காரர்களுக்கு மட்டும் சலுகை செய்யும் அரசாக பா.ஜ., உள்ளது.
தமிழகத்தில் நடக்கும் ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி. மத்தியில் நடக்கும் ஆட்சி பணக்காரர்களுக்கான ஆட்சி. பா.ஜ., இயற்றிய பாதக சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தது அ.தி.மு.க., தான். பா.ஜ., விற்கு அ.தி.மு.க., வின் துணை இல்லாமல் இருந்திருந்தால் முக்கியமான சட்டங்களை நிறைவேற்றாத வகையில் தோற்கடித்திருப்போம்.
தமிழகத்தில் வெள்ளம் வந்த போதும், பேரழிவு ஏற்பட்ட போதும் பிரதமர் மோடி வரவில்லை. ஆனால் தற்போது 10 முறைக்கு மேல் தமிழகத்திற்கு வருகிறார்.
இவை உங்கள் கையில் உள்ள ஓட்டுக்காக மட்டுமே. இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக் கடன் வட்டியுடன் தள்ளுபடி செய்யப்படும். என்றார்.